செங்கல்பட்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக மாமல்ல புரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வரும் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின் னங்களான கடற்கரைக் கோயில் மற்றும் ஐந்து ரதம் உள்ளிட்ட குடைவரைக் கோயில் சிற்பங்கள் மற்றும் இயற்கை அழகுடன் கூடிய கடற்கரையைக் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இந்நிலை யில், உலக நாடுகள் முழுவ தும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்று லாத் தலங்களுக்குச் செல் வதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். நாடு முழுவதும் தொல்லி யல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியக் கலைச் சின்ன வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் வரும் 31ஆம் தேதி வரையில் மூடப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக மா மல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச்சின்ன வளாகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற் கரைக் கோயில், ஐந்து ரதம், வெண்ணைய் உருண்டை பாறை வளாகங்களுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதிகளின் கதவுகள் மூடப்பட்டுள்ளன. இதேபேன்று தமிழக அரசு அறிவித்தபடி செங்கல் பட்டு மாவட்டத்தில் செயல் பட்டுவரும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வண்டலூர் உயிரியல் பூங்கா, உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேடந்தாங்கல், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டு தகவல் பலகை வைக்கப் பட்டுள்ளது.