சென்னை:
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.கடந்த 12-ஆம் தேதி முதல், தினமும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சோழன் எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கும் திருச்சியிலிருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.இந்த ரயில்களில் முறையே 14 மற்றும் 16 பெட்டிகள் உள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.மற்ற பெட்டிகள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.பயணிகள் முகக் கவசம் அணியவும், உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு தனி நபர் இடைவெளியுடன் அமரவும் அறிவுறுத்தப்படும் நிலையில் பெரும்பாலானோர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.