செங்கல்பட்டு, அக்.6- சீன ஜனாதிபதி மாமல்ல புரம் வருவதையொட்டி அப்பகுதி யில் செயல்பட்டுவந்த சிறுகடை கள் அகற்றப்பட்டதால் வாழ்வாதா ரத்தை இழந்துள்ள வியாபாரி களுக்கு கடை வாடகையை பேருராட்சி நிர்வாகம் தள்ளுபடி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதன் விவரம் வருமாறு:- பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி இருவரும் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பிரச்சனைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்திட மாமல்லபுரம் வருகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் , கடற்கரை செல்லும் பகுதிகளிலும், ஐந்துரதம், வெண்ணைய் உருண்டை கல் மற்றும் இதர சுற்றுலா பயணிகள் பார்வையிடும் பாதைகளில் உள்ள சிறுகடைகள் மற்றும் சாலையோர நடைபாதை கடைகள் ஆகியவவை அகற்றப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் இக்கடைகள் அகற்றப்பட்டும் , மூடப்பட்டும் உள்ளன. இதனால் இந்த சிறு வியாபாரத்தை நம்பி வாழ்ந்து வந்த சுமார் 500 குடும்பங்கள் கடந்த ஒருவார காலமாக வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் என்பதே சுற்றுலா பயணிகளின் வரு கையால்தான் நடந்து வருகிறது. மேலும் அக்டோபர் 15 வரை 10 தினங்கள் கடைகள் திறக்கப்படாமல் இருந்தால் இவர்களின் வாழ்க்கை பெரிதும் சிரமத்திற்குள்ளாகிவிடும் , எனவே மேலும் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் மீண்டும் கடற்கரை செல்லும் பாதையில் கடைகள் அகற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் கடைகள் வைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். கடற்கரை கோவில், கடற்கரைக்குச் செல்லும் சாலை யோர சிறுகடைகள் அமைத்து அமைப்பு நடத்திவரும் சுமார் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் அப்பகுதியில் பொருத்தமான முறையில் கடைகள் அமைத்துத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அகற்றப்பட்ட கடைகளின் சேதாரத்திற்கு உரிய இழப்பீடும், மறுவாழ்வுக்கு உதவும் வகையில் வங்கி மூலம் கடனுதவி யும் வழங்கிட வேண்டும்,- ஐந்து ரதம் பகுதியில் செயல்பட்டு வந்த சுமார் 50 கடைகள் 20 நாட்க ளுக்கும் மேலாக மூடப்படும் நிலை யில் இக்கடைகளுக்கு உரிய வாடகையை பேரூராட்சி நிர்வாகம் தள்ளுபடி செய்திட வேண்டும் . மாமல்லபுரத்தில் இதர சுற்றுலா பகுதிகளில் சிறு சிறு நடைபாதை கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்களுக்கும், மேற்படி கடற்கரை கோயில், கடற்கரைக்கு செல்லும் பாதையோரம், ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த சுமார் 500 குடும்பங்க ளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும் இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.