tamilnadu

img

கேஸ் விலை, சுங்க கட்டணம் உயர்வுக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை, செப். 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையினால் இந்திய நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலையிழப்பு என பல முனைகளில் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு  சமையல் எரிவாயு விலையை ஒரு சிலிண்ட ருக்கு சுமார் ரூ. 16 உயர்த்தியுள்ளது. அதே போல தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண த்தையும் மூன்று சதமானம் உயர்த்தி யுள்ளது.

சர்வதேச சந்தையில் பொதுவாக சமையல் எரிவாயு குறைந்து வரும் சூழ்நிலை யில், இங்கு விலை உயர்த்தியிருப்பதும், இதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் வசூ லிக்கும் சுங்க கட்டணத்தையும் உயர்த்தி யுள்ளதும்  மக்கள் மீது தொடுக்கப்பட்ட மோச மான தாக்குதலாகும். சுங்க கட்டணத்தை உயர்த்துவது அனைத்துப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு வழிகோலும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மீண்டும், மீண்டும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது சுமைகளை ஏற்றும் இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக இந்த கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறது.