tamilnadu

img

செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை

சென்னை, பிப்.6- சென்னை மந்தவெளி யில் உள்ள முன்னாள் அமைச்சரும் தி.மு.க. எம்.எல்.ஏ- வுமான செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2011ஆம்ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை  அமைச்சராக இருந்த செந் தில்பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக கூறி  பணம் மோசடியில் ஈடுபட்ட தாக வழக்குப்பதிவு செய்  யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வரு கிறார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது  தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி செந்  தில்பாலாஜியின் வீட்டில் திடீரென மத்திய குற்றப்  பிரிவு போலீசார் சோதனை  நடத்தினர். கரூரில் உள்ள வீடு  மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. சென்னை மந்தவெளி யில் உள்ள செந்தில் பாலாஜி யின் வீடு பூட்டி கிடந்ததால் போலீசார் சீல் வைத்தனர். இந்த வீட்டில் வியாழனன்று (பிப்.6)  காலை போலீசார் சீலை உடைத்து உள்ளே புகுந்து சோதனை நடத்தி னார்கள். அப்போது வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக  ஆவணங்களை தேடினர்.ஆனால் எதுவும் சிக்க வில்லை.