சென்னை, ஜுலை 17- நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பத்திரி கையாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.15 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்ன லிஸ்ட் (டி.யூ.ஜெ) சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் செய்தியாளர்களின் பணி மற்றும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வும், அவர்களின் நலன்களை காக்கவும், சத்தீஷ்கர் மற்றும் மகாராஷ்ரா மாநிலங்க ளில் அமலுக்கு வந்ததை போன்ற பத்திரிகை யாளர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அந்த சட்டத்தின் கீழ் “தமிழ்நாடு மீடியா கவுன்சில்” என்ற உயர் அதிகாரம் மிக்க அமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரை தலைவராகவும் அரசு தரப்பில் செய்தித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை உறுப்பி னர்களாகவும் கொண்ட அமைப்பாக அது உருவாக்கப்பட வேண்டும்.
அந்த அமைப்பு, பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது நடை பெறும் தாக்குதல் குறித்து உரிய விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க பரிந்துரை செய்யும் அமைப்பாகவும் உருவாக்கப்பட வேண்டும். மேலும், பத்திரிகையாளர்களின் ஊதிய அம லாக்கம் கண்காணிப்பு மற்றும் அவர்களு டைய நலன்களை பாதுகாக்கும் உயர் அதிகாரம் மிக்க அமைப்பாகவும் அது செயல்பட வேண்டும்.
இன்று தமிழகத்தில் உள்ள பத்திரிகை யாளர்களின் 90 சதவீதம் பேர் மிக மிக குறை வான ஊதியத்தை பெறுகின்றனர். தமிழக அரசால் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய மாக வழங்கப்படும் ரூ.10 ஆயிரத்தை விட மிக குறைந்த தொகையை தான் மாத ஊதியமாக இன்று 90% பத்திரிகையாளர்கள் பெறும் அவலநிலை உள்ளது. எனவே தமிழக அரசு உழைக்கும் பத்திரிகையாளர்களின் குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கவும், குறைந்த பட்ச ஊதியக்குழு பரிந்துரைகளை அமலாக்கிடவும், ஈ.எஸ்.ஐ., .எப்., அளிக்கப்படுவதை உறுதி செய்திடவும், அவர்களுடைய ஊதியத்தை பத்திரிகை ஊடக நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கிடவும் உரிய நடவ டிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் பத்திரிகையாளர்களுக்கான நீதிபதி மஜித்தியா ஊதியக்குழுவின் பரிந்து ரைகளை தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அமலாக்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்குமான விரிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவக்காப்பீட்டு திட்டம் போல் தமிழகத்திலும் பத்திரிகையா ளர்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்க ளும் சிகிச்சை பெற தனி மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளை முற்றிலும் தளர்த்தி இன்றைய சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓய்வூதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
பணியின்போது மரணம் அடையும் செய்தியாளர் குடும்பத்திற்கு மத்திய அரசு வழங்குவதுபோல் (மத்திய அரசு செய்தி மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சகம் குறிப்பு ஆணை எண்:S-12015/1/2018- Press. Date 5.03.2019) ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மேலும் பணியின் போது உயிரி ழக்கும் பத்திரிகையாளரின் துணைவியா ருக்கு ரூ.5ஆயிரம் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
புற்றுநோய் உள்ளிட்ட கொடூரமான நோ யினால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்க ளுக்கு சிகிச்சை பெற தேவையான நிதியை வழங்க தற்போது தமிழக அரசு ஏற்படுத்தி உள்ள நல நிதியத்திலிருந்து அவர்களுக்கு முழு செலவையும் அரசே வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு பத்திரிகையாளர் நலநிதி யத்திற்கு ரூ.1 கோடி மட்டுமே டெபாசிட் செய்துள்ளது. இந்த டெபாசிட் தொகையை ஆந்திரா, தெலுங்கானா அரசை போல் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.
சமூகத்தில் சரி பாதியாக உள்ள பெண்கள் பத்திரிகை துறைகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் பல்வேறு இன்னல்களு க்கு மத்தியில் ஆண்களோடு சரி நிகராக இரவு, பகல் பாராது பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் பணியினை மேலும் ஊக்கப் படுத்தும் விதமாக ஆண்டுதோறும் சிறப்பாக பணிபுரியும் பெண் பத்திரிகையாளர்கள் இருவரை (1. அச்சு ஊடகம், 2. காட்சி ஊடகம்) தேர்வு செய்து ஆந்திரா மாநில அரசால் வழங் கப்படுவதை போல் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ரொக்கப்பரிசும் வழங்கி கௌர விக்க வேண்டும்.
தினசரி, மற்றும் வார இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு, வழங்கப்படும் அரசு உதவிகள் போல, தொலைக்காட்சிகளில் பணி புரியும் செய்தியாளர்களுக்கும் உதவிகள் கிடைக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டத்தை இயற்ற தமிழக அரசு மத்திய அரசை வலி யுறுத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்களுக்கு வாகன கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
தனிநபர்களுக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவ னத்தின் சார்பில் அமல்படுத்தி வரும் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.567 பிரீமியம் செலுத்தினால் உயிரிழக்கும் பயனாளிகள் குடும்பங்களுக்கு ரூ.11 லட்சம் வரை நிதி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு பத்திரிகையா ளர்களுக்கு அமல்படுத்த வேண்டும். பிரீமியம் தொகையில் அரசு தரப்பில் 50% சதவீதம் பத்திரிகையாளர்கள் பணிபுரியும் நிறுவன தரப்பில் 50% சதவீதம் என்ற பங்க ளிப்போடு இத்திட்டத்தை தமிழக பத்திரிகை யாளர்களுக்கு நிறைவேற்றிட வேண்டும்.
தமிழகத்தில் தாலுகா அளவில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தமிழக அரசு பஸ்களில் பயணிக்க இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும்.
அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் அனைவ ருக்கும் கடந்த ஆண்டை போல இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். இந்த ஆண்டு குறைத்து வழங்கப்பட்ட பஸ்பாஸை உடனடி யாக தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு கடந்த ஆண்டை போல் அங்கீகார அட்டை பெற்ற அனைவருக்கும் பஸ்பாஸ்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.