தொடக்கக் கல்வி இணை இயக்குநரிடம் மாணவர் சங்கம் மனு
சென்னை, டிச. 2- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி தொடக்கக் கல்வி இணை இயக்குநர் ஆனந்தியிடம் இந்திய மாணவர் சங்கத்தி னர் மனு அளித்தனர். மனுவை சங்கத்தின் மாநில துணைத் தலைவர் க. நிருபன் சக்கரவர்த்தி, பள்ளி மாணவர்கள் ஒருங்கி ணைப்புக் குழு துணை கன்வீ னர் ர.சுர்ஜித், மாநில துணைச் செயலாளர் ஆ.இசக்கி நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தீ.சந்துரு ஆகி யோர் அளித்தனர். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு:
மத்திய அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019-ன் மீது கருத்து கேட்கப்பட்டு, அதன் இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. வரைவு அறிக்கையில் கடுமையாக எதிர்க்கப்பட்ட பல பிரிவு கள் மீண்டும் இறுதி அறிக்கை யிலும் இடம்பெற்றது. இதனை எதிர்த்து மாண வர்களும், மக்களும் கடுமை யான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப் பாக, 3, 5, 8ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 8 பருவத் தேர்வை (செமஸ் டர்) நடத்துவதாகக் கூறி யிருப்பது கடும் ஆட்சேபத் திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முதல் நடைபெறும் என்று அறி வித்தது. இதற்கு எதிராக போராட்டங்கள் எழுந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிப்பதாக அரசு அறிவித்தது.
ஆனால், 2019-20 ஆம் கல்வியாண்டு முதலே 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என அக். 22 அன்று அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. மாணவர்களின் தற்கொலை அதிகரிக்க தேர்வுமுறை மிக முக்கிய காரணம் என உயர்நீதி மன்றமே கூறியுள்ள நிலை யில், பொதுத்தேர்வு நடத்து வது துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்க ளின் எதிர்காலத்தை பாதிக் கும். வாழ்வியல் சார்ந்த நெருக்கடியையும், மன உளைச்சலையும் மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.