சென்னை, மார்ச் 17 - அறநிலையத்துறையில் பணியாற்றும் தற்காலிக பணி யாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார். 1.7.2009 முதல் 30.6.2014 வரை பணியாற்றிய 8 ஆயிரத்து 184 திருக்கோயில் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படு வார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறி வித்து, 2 ஆயிரத்து 208 பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்ட னர். இதில், சுமார் 350 பணியாளர்கள் விடுபட்டனர். எனவே, விடுப்பட்ட 350 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனைனை செவ்வாயன்று (மார்ச் 17) தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் மாநில பொ துச்செயலாளர் அ.முத்துசாமி, முதுநிலை திருக்கோயில் பணி யாளர் சங்க தலைவர் ஷாஜிராவ், மதுரை முருகேசன், சென்னை கோட்ட கவுரவத் தலைவர் சிவஸ்ரீ ராஜூகுருக்கள், தலைவர் எஸ்.தனசேகர், செயலாளர் ரமேஷ், பொருளாளர் குகன் ஆகியோர் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், மிக விரைவில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய ஏற்பாடுகள் செய்து, நிலுவையில் உள்ள பணியாளர்களையும் பணிநிரந்த ரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.