tamilnadu

img

தொல்லியல் துறைக்கு தனி திட்டம் கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்

அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

சென்னை, செப்.22- தொல்லியல் துறைக் கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது என்றும் கீழடியில் உலகத்தர அருங் காட்சியகம் அமைக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரி வித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆறாம் கட்ட அகழாய்வுக் கான இடம் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள் ளன. அடுத்தகட்டமாக கீழ டிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மண லூர் ஆகிய இடங்களில் அக ழாய்வு செய்யவுள்ளதாக வும் ஆதிச்சநல்லூரிலும் புதி தாக ஆய்வுகளைத் தொடங்க வுள்ளதாக மாநில தொல்லி யல் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள் ளார். இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் தோல்துறை திறன் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி க்குப் பின்னர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கீழடியில் நடைபெற்ற முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற தில்லி செல்ல உள்ளேன். விரை வில் முடிவுகள் வெளியிடப் படும். தொல்லியல் துறைக் கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதில் தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கள், புதிதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்த தக வல்கள் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

உலகத்தர அருங்காட்சியகம்

பொள்ளாச்சியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச் சர் மா.ஃபா. பாண்டியராஜன் பேசுகையில், கீழடி அக ழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு கீழடி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும். கீழடியில் அடுத்த கட்ட ஆய்வு நடத்த உலக பிரசித்தி பெற்ற பல்க லைக்கழகத்துடன் இணை ந்து செயல்படுத்த இருப்ப தாகவும் இதில் 11 தொழில் நுட்பங்களை பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.