tamilnadu

இனவெறியை தூண்டும் வீடியோக்களுக்கு தடை விதித்த யூ டியூப் நிறுவனம்

வாஷிங்டன்,ஜூன் 6-சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்தவீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:யூ டியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையை கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் ஒரு இனம் உயர்ந்தது என்பதுபோல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உடனடியாக அமலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமலுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளது.நியூசிலாந்து மசூதிகளில் நிகழ்ந்த தாக்குதல் நேரலையாக யூ டியூப்பில் ஒளிபரப்பானது.இதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.இதனையடுத்து யூ டியூப் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.