tamilnadu

விழுப்புரம், திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

மாற்று இடம் வழங்க விழுப்புரம் ஆட்சியர் ஒப்புதல்

விழுப்புரம், ஆக. 31-  நெடுஞ்சாலைத்துறையால் இடிக்கப் பட்ட குடியிருப்புகளுக்கு ஒருவார காலத்தில் மாற்று இடம் வழங்கப்படும் என  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விழுப்பு ரம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். திருக்கோயிலூர் வட்டம் தடுத்தாட் கொண்டூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்த ஆறுமுகம், ராமச்  சந்திரன், குபேந்திரன், கலியன் ஆகிய நான்கு  பேரின் குடியிருப்புகளை, அந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறி அதிகாரிகள் புதனன்று (ஆக. 28) இடித்தனர். இவர்கள் கடந்த 1993ஆம் ஆண்டு பட்டா கேட்டு திருக்கோவிலூர் வட்டாட்சியர், முதல மைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர்  ஆகியோருக்கு மனு அளித்தும் இவர்க ளுக்கு பட்டா வழங்கப்படவில்லை. அதேபோல் உளுந்தூர்பேட்டை வட்டம் கோட்டையாம்பாளையம் கிராமத்தில் பூங்கொடி என்பவர் அரசு இடத்தை ஆக்கிர மித்து வீடு கட்டியுள்ளதாகக்  கூறி அவரது வீட்டை இடிப்பதற்கு வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று (ஆக. 30)  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமை யில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு  மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, துணைச்செயலாளர் எஸ்.ஜோதிராமன், நிர்வாகி கே.எம்.ஜெயராமன் ஆகியோர் வீடு  இடிக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கவும், வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தினர்.  அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ஒருவார காலத்தில் தடுத்தாட்கொண்டூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கப்படும் எனவும், அதுவரை இரு  குடும்பத்தினர் அங்குள்ள அரசுப் பள்ளிக்  கூடத்தில் தங்கிக் கொள்ளவும் அனுமதி அளித்  தார். அதேபோல் கோட்டயாம்பாளையம் கிரா மத்தில் பூங்கொடி குடும்பத்தின் நிலம் பிரச்  சனை தொடர்பாக நேரில் வந்து ஆய்வு  செய்து, தீர்வு காண்பதாகவும் உறுதி யளித்தார்.

வேங்கிக்கால் ஏரியில் மண்கொள்ளையை தடுக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக. 31- திருவண்ணாமலையில் வேங்கிக்கால் ஏரியில் தூர்  வாருவதாக கூறி அதிகாரிகள்  துணையுடன், ரியல்எஸ்டேட்  அதிபர்கள் ஆயிரக்கணக் கான லோடுக்கு மேல் மண் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரிடம் அளித்  துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, மத்திய அரசின் நீர்  மேலாண்மை கொள்கையின் ஒரு பகுதியாக, ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை அறிவித்து, அந்த திட்டத் தின்படி ஏரி குளம் உள்ளிட்ட  நீர்நிலைகளை பாதுகாக்க வும், தூர்வாரவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் ஜல்  சக்தி அபியான் திட்டதிற்கான  பணிகள் கடந்த 2ஆம் தேதி  பணிகள் துவக்கப்பட்டது. ஆனால் ஏரியை தூர் வருவ தற்கு பதிலாக, ஏரியில் உள்ள  மண்ணை விற்பனை செய்து  வருகின்றனர். நீர்நிலைகளை  தூர்வாறுதல் என்பது, அதிக பட்சம் 2 அடி முதல் 3 அடி  வரை மட்டுமே தூர்வார வேண்டும். ஆனால் வேங்கிக்  கால் ஏரியில் 7 முதல் 10 அடி  வரை பள்ளம் தோண்டி பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி  இயந்திரங்கள் மூலம், 20க்கும் மேற்பட்ட லாரிக ளில் மண் கொள்ளையடிக் கப்படு கிறது. அந்த மண்,  ரியல் எஸ்டேட் நிறுவனங்க ளுக்கும், தனி நபர்களுக்கும்  விற்பனை செய்யப்படுகிறது. எனவே மேற்கண்ட மணல் கொள்ளையை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தடுத்து  நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;