இளம் கம்யூனிஸ்ட்களுக்கு பயிலரங்கம்
பொன்னமராவதி, ஆக.15 - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளம் கம்யூனிஸ்ட்க ளுக்கான முதல் பயிலரங்கம் கட்சியின் மாவட்டக் குழு அலு வலகத்தில் நடைபெற்றது. கட்சியின் கல்விக் குழு கன்வீனர் அ.மண வாளன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ரா.மஹாதிர் வரவேற்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் துவக்கவுரையாற்றினார். ‘இளம் தலைமுறையினரின் இலக்கு என்ன’ என்ற தலைப்பில் மத்திய கட்டுப்பாட்டு குழு தலை வர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, செயற்குழு உறுப்பினர்கள் கே. சண்முகம், துரை.நாராயணன், கி.ஜெய பாலன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டக் குழு உறுப்பினர் வசந்தகுமார் நன்றி கூறினார்.