tamilnadu

img

பெண்ணுரிமை போராளி ஷாஜாதி நூற்றாண்டு; பேரணி, பொதுக்கூட்டம் - மலர் வெளியீடு

பெண்ணுரிமை போராளி ஷாஜாதி நூற்றாண்டு; பேரணி, பொதுக்கூட்டம் - மலர் வெளியீடு

கடலூர், ஜூலை 26- தமிழகத்தில் மாதர் இயக்கத்தின் ஸ்தாபக தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்க போராளியுமான தோழர் ஷாஜாதி கோவிந்தராஜனின் நூற் றாண்டு விழா நெல்லிக்குப்பத்தில் கோலாகலமாக நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு, சனிக் கிழமை மாலை ஷாஜாதி கோவிந்த ராஜனின் நினைவிடத்தில் மூத்த தோழர் டி. ஆறுமுகம் கொடியேற்றி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் நினைவுக் கல்வெட்டைத் திறந்து வைத்தார். வேர்களுக்கு விழுதுகளின் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.  சி.  கோவிந்தராஜன், ஷாஜாதி கோவிந்த ராஜன் நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து தலைவர்கள் அஞ்சலி  செலுத்தினர். முன்னதாக, வைடிப் பாக்கத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா தொடங்கி வைத்தார்.  நெல்லிக்குப்பம் பேருந்து நிலை யத்தில் நூற்றாண்டு விழா - பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ. மாதவன்  தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு வர வேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. சுப்ப ராயன், பழ. வாஞ்சிநாதன், மாவட்டக்  குழு உறுப்பினர் எம். ஜெயபாண்டி யன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் பா.  ஜான்சி ராணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சி.கோவிந்தராஜன் - ஷாஜாதி நூற்றாண்டு விழா மலரை சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் வெளியிட சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. பழனிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.  மாதவி ஆகியோர் பெற்றுக் கொண்ட னர். நெல்லிக்குப்பத்தின் மூத்த தோழர்கள் ஆர்.வி. சுப்பிரமணியன், ஆர்.வி. சந்திரா ஆகியோர் கௌர விக்கப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி. உதயகுமார், பி. கருப்பை யன், ஆர். ராமச்சந்திரன், எஸ். திரு அரசு, ஜி.ஆர். ரவிச்சந்திரன், பி.  தேன்மொழி, ஜே. ராஜேஷ் கண்ணன்,  ஆர். அமர்நாத், எஸ். பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பகுதிச் செயலாளர் பி. ஸ்ரீபன் ராஜ் நன்றி  கூறினார்.