tamilnadu

img

தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, நலத்திட்ட உதவிகள்

தூய்மைப்பணியாளர்  நல வாரிய உறுப்பினர்களுக்கு,  நலத்திட்ட உதவிகள் 

பெரம்பலூர், ஆக.14-   பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் சார்பில், தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத் தலைவர் டாக்டர். திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  தொடர்ந்து, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்களான 170 நபர்களுக்கு, இயற்கை மரண உதவி மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, முறையான பட்டப்படிப்பு படிப்பதற்கான உதவித்தொகை, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிப்பதற்கான உதவித்தொகை, முறையான மேற்பட்ட படிப்பு விடுதியில் தங்கி படிப்பதற்கான உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் என ரூ.4,45,225 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், 1,171 தூய்மை பணியாளர்கள் அடையாள அட்டைகளையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார். பின்னர், தூய்மை பணியாளர்களிடம் தேவைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தலைவர் கேட்டறிந்து, தொடர்புடைய துறைகள் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கக் கூடிய கோரிக்கைகளுக்கு முதல்வரிடம் பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார். தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைத்திடவும், மாதந்தோறும் குறித்த காலத்திற்குள் மாத ஊதியமும், அடிப்படை வசதிகளான கை, கால் உறை, சோப்பு உள்ளிட்டவைகளையும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.   இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் நா.சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.