tamilnadu

img

இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்!

இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்!

மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டு முதல்வர் பேச்சு

சென்னை, ஆக. 8 - “இருமொழிக் கொள்கை தான், நமது உறுதியான கொள்கையாக இருக்கும். இதன்மூலம் கல்வியில் முன்னணி மாநிலமாக  இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்று வோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற சிறப்பு விழாவில், ‘தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை- 2025’ஐ முதலமைச்சர் வெளியிட்டார். இந்த விழாவில் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பாராட்டும் வழங்கப்பட்டது. அப்போது, பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்தாலே ஒரு புதிய சக்தி வந்துவிடும் என்று கூறிய முதல்வர், “கொரோனா காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்தபோது, அந்தப் பெருந்தொற்றால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்று ‘இல்லம் தேடிக் கல்வி’ போன்ற முன்னெடுப்புகளை எடுத்து கல்வி வழங்கினோம்” என்றார். “பள்ளிக்கல்வி வரலாற்றில் இது சிறப்பான, தனித்துவமான விழா” என்று குறிப்பிட்ட அவர், “வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட பாராட்டு விழாக்கள் நடத்தப்படுவதாக தெரியவில்லை” என்றார். அரசுப் பள்ளிகளின் வெற்றிக் கதை! “கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்களில் 977 பேருக்கு முதன்மை  உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 901 பேர் இந்த சாதனையை படைத்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், ஐஐடி-யில் இந்த  ஆண்டு 27 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ள னர். இது முந்தைய ஆண்டுகளின் ஒற்றை  எண்ணிக்கையிலிருந்து இரட்டை எண் ணிக்கைக்கு உயர்ந்துள்ளது என்பது சிறப்பானது. 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 50 வெவ்வேறு துறைகளில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 150 பேர் மாற்றுத் திறனாளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளி மாணவர்களில் உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு” என்று முதல்வர் தெரிவித்தார். “இந்த எண்ணிக்கையை அடுத்த ஆண்டு 100 சதவீதமாக உயர்த்துவதே அரசின் இலக்கு” என்றார். “அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாள மல்ல, பெருமையின் அடையாளம்” என்று  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி யின் வாசகத்தை மேற்கோள் காட்டிய முதல்வர், அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகள் நெஞ்சை நிமிர்த்திப் பேச வைத்துள்ளதாக கூறினார். மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் “புதிய மாநிலக் கல்விக் கொள்கை எதிர்