tamilnadu

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

தமிழக அரசுக்கு சிஐடியு நன்றி தெரிவிப்பு

சென்னை, ஜூலை 21 - பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ரசல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் (சென்னை தலைமை அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி படகு துறை) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை திங்களன்று (ஜூலை 21) பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  பேச்சு வார்த்தையில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.என்.வெங்கடேஷ் தலைமையிலான குழுவினருடன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் தலைவர் ஆர்.ரசல், செயலாளர் சகாய மார்சலின், பொருளாளர் முத்துவேல்பிள்ளை, துணைச் செயலாளர் விஸ்வநாதன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தொழிலாளர் துறை ஆணையர் எஸ்.ஏ.ராமன், சிறப்பு இணை ஆணை யர் எல்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், “1.04.2019 முதல் 31.3.2023 வரையிலான நான்காண்டு காலத்துக்கான ஒப்பந்தத் தின்படி, பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு 1.04.2019 முதல் ஏற்கனவே பெற்று வரும் ஊதி யத்தில் ஆறு சதவீத ஊதிய உயர்வு, பத்தாண்டுகள் பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு கூடுதலாக மூன்று சதவீத ஊதிய உயர்வு வழங்குவது” என முடிவு செய்யப்பட்டது.  நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற் படுத்துவதற்கு உதவிசெய்த பூம்பு கார் நிறுவனத் தலைவர் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் சிஐடியு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் பூம்புகார் கப்பல் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்கு நரை சந்தித்த சிஐடியு மாநிலச் செய லாளர் ஆர்.ரசல் தலைமையிலான நிர்வாகிகள், பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தில் 10 ஆண்டு காலத்துக்கு மேலாக ஒப்பந்த தொழி லாளிகளாக பணிபுரியும் தொழிலாளர் களை நிறுவனத்தில் நிரந்தரப்படுத்து வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு இவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.