கடலூர் மாநகராட்சி குப்பை வண்டியில் வாக்காளர் அடையாள அட்டைகள்
கடலூர், ஜூலை 30 கடலூரில் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் வாக்காளர் அடையாள அட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பில்லுக்கடை தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் மாலை நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். வழக்கம் போல் புதன்கிழமை காலை குப்பை வாகனத்தை தூய்மை பணி யாளர்கள் எடுத்துச் செல்ல முயன்ற போது அதில் கட்டு கட்டாக வாக்காளர் அடை யாள அட்டைகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். உடனே மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்ததும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத் திற்கு வந்த கடலூர் வட்டாட்சியர் மகேஷ், வாக்காளர் அடையாள அட்டைகளை சோதனை செய்த பொழுது அனைத்து வாக்காளர் அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர் அடை யாள அட்டைகள் என்பது உறுதி செய்யப் பட்டது. வட்டாட்சியர் இதனை கைப்பற்றி கள்ளக் குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வரு கிறார். கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள், தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, சீல் மற்றும் தேர்தல் பணிக்கு செல்லுபவர்கள் அணிந்துள்ள பேட்ச், தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட் கள் இருந்ததை கடலூர் வட்டாட்சியர் மகேஷ் மற்றும் மஞ்சக்குப்பம் வருவாய் ஆய்வா ளர் வைத்தியநாதன் ஆகியோர் பார்வை யிட்டு மேற்படி பொருட்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். வாக்காளர் அட்டைகளை வீசிய மர்ம நபர்கள் பேட்டரியால் இயங்கும் குப்பை அள்ளும் வாகனத்தின் வயர்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டதால் வாகனத்தை இயக்க முடியவில்லை என்று தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் 100 க்கும் மேற்பட்ட வாக்கா ளர் அடையாள அட்டைகள் கிடந்தது கடலூ ரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.