மழையில் நனையும் நெல் மூட்டைகள் மொபைல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரி அவசர வழக்கு
மதுரை, அக்.17- தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெல் மூட்டை கள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அரசு மொபைல் நடமாடும் கொள்முதல் நிலை யங்களை அமைக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட அவசர பொதுநல வழக்கில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, வெள்ளி யன்று பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஜீவாகுமார் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மழை தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதால் அவசரவிசாரணை நடத்துமாறு மனுதாரர் கேட்டுக் கொண் டதை ஏற்றுக்கொண்டநீதிமன்றம், வழக்கை வியாழனன்று விசாரித்தது. நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் தலைமையிலான அமர்வில் வியாழனன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.