tamilnadu

img

ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி  தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மோடி- டிரம்ப் உருவப்படத்தை எரித்து ஆவேசம் 

மயிலாடுதுறை, ஆக.14-  அமெரிக்க-இந்திய வேளாண் வணிக ஒப்பந்தத்தைக் கண்டித்து, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி- மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் புதனன்று நடைபெற்றது. இந்திய விவசாயிகள், நுகர்வோர்களுக்கு பாதகமான அமெரிக்க, இந்திய வேளாண் வணிக ஒப்பந்தத்தைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்கள், தொழிற்சங்க நிர்வாகிகள்  உரையாற்றினர்.  தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோரது உருவப்படத்தை எரித்து கண்டன முழக்கமிட்டனர்.  கரூர் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் மாவட்டத் தலைவர் வி.க. அன்னவேலு தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் சி.ஆர். ராஜாமுகமது, மாவட்டத் துணைத் தலைவர் சி.‌முருகேசன், எல்ஐசி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சிவராமகிருஷ்ணன், ஐஎன்டிசி கே.பழனிச்சாமி, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜசேகர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி. எஸ். வடிவேலன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் எம்.பால்ராஜ் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.