ஒன்றிய அரசே, கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுக!
கீழடி அகழாய்வு அறிக்கையை மூடி மறைக்க முயலும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த ஆய்வறிக்கையை ஏற்று வெளியிட வலியுறுத்தியும் தமுஎகச சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உரையாற்றினார். கீழடி, கொந்தகை, மணலூர், கழுகர் கடை ஊராட்சி பொதுமக்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.