போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் - புடின் நேரடி பேச்சு
ரஷ்யாவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
அலாஸ்கா, ஆக. 16 - உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் - புடின் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தினர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை ரஷ்யாவில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து, அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் ரஷ்ய ஜனாதிபதி புடினும் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணிநே ரம் 50 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு- ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தங்களின் சந்திப்பு குறித்து, டிரம்ப்- புடின் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “போர் நிறுத் தம் குறித்து உடன்பாடுகள் எதுவும் இறுதி செய்யப்படவில்லை” என டிரம்ப் தெரிவித்தார். மேலும், உக் ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் விரை வில் பேச திட்டமிட்டுள்ளதாகவும், புடி னுடனான பேச்சுவார்த்தை குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க திட்ட மிட்டுள்ளதாகவும் கூறினார். அதேபோல, இந்த பேச்சுவார்த்தை யில் தானும் டிரம்பும் ஒரு ‘புரிதலை’ அடைந்துள்ளதாகவும் பேச்சுவார்த்தை யில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற் றத்தை உடைக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என ஐரோப்பிய நாடுகளை எச்சரித்துள்ளதாகவும் புடின் தெரிவித்தார். மேலும் பேச்சுவார்த்தையின் மூலம் எங்களுக்கு இடையே நல்ல முன்னேற் றம் ஏற்பட்டு உள்ளது. நானும் டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். பேச்சு வார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். அடுத் தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் ரஷ்யாவில் நடைபெறும் என்றும் புடின் கூறினார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவி யேற்றால் 24 மணிநேரத்தில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் அறிவித்தி ருந்தார். ஆனால் போர் நிறுத்தம் ஏற்பட வில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் போர் நிறுத்தம் ஏற்பட வில்லை. இந்நிலையிலேயே தற்போது, அமெரிக்காவின் அலாஸ்கா மாகா ணத்தில் ராணுவப் படைதளத்தில் டிரம்ப் மற்றும் புதின் சந்திப்பு நடந் துள்ளது. முன்னதாக, பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா வந்த புடினுக்கு வழக் கத்திற்கு மாறாக அமெரிக்கா சிறப் பான ராணுவ வரவேற்பை அளித்து வரவேற்றது. பேச்சுவார்த்தையில் இரு நாட்டின் ஜனாதிபதிகள் மட்டுமன்றி, பாது காப்புத்துறை, நிதித்துறை அமைச் சர்கள், அதிகாரிகளும் கலந்து கொண்ட னர்.
ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக டிரம்ப் தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடான சந்திப்பைத் தொடர்ந்து, தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை டிரம்ப் பதிவிட் டுள்ளார். அதில், “புடினுடனான தனது சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. போரை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்தால் அது நிலைக்காது. உக்ரைன் ஜனா திபதி ஜெலன்ஸ்கியை திங்கள் கிழமை சந்திப்பேன். அனைத்தும் சரியாக நடந்தால் அதன் பிறகு நாங்கள் ரஷ்ய ஜனாதிபதி புடினு டன் ஒரு சந்திப்புக்கு திட்டமிடு வேன்” என தெரிவித்துள்ளார்.