tamilnadu

ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி

ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி

கோவை, ஜூலை 9- கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவர் களுக்கு கோவையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கடலூரில் திங்களன்று நடந்த ரயில் விபத்தில் உயி ரிழந்த மூன்று மாணவர்களுக்கு கோவை, ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதற்கு குடியிருப்போர் நல சங்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் வி.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். குடியிருப்பில் சங்கத்தின்  தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி கூட்டத்தில் இரங்கல் தெரிவித்தனர். பொதுமக்கள் திரளாக பங் கேற்று மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர் வி.தெய்வேந்திரன் உரையாற்றுகையில், இதுபோன்ற ரயில்வே கேட்டுகள்  தமிழகம் முழுவதும் பல இடங்களில் உள்ளது. இதில் ஒன்று சிவலிங்கபுரம் சூர்யா நகர் கடவு எண் மூன்று.  இங்கு மேம்பாலம் கட்டுவதற்கு அரசாணை 2011 இல்  போடப்பட்டது. ஆனால் இதுவரை இங்கு மேம்பாலம் அமைக்கப்படவில்லை. காலை நேரங்களில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் சூர்யா நகர் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் ரயில் வரும்  நேரத்தில் ரயில்வே கேட்டை கடக்கின்ற போது அச்சத்துடனே மக்கள் சென்று வருகிறார்கள். 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் வரும் பாதையாக சூர்யா நகர் ரயில்வே பாதை இருக்கிறது. எனவே தமிழக அரசும்,  மாவட்ட நிர்வாகமும் கவனம் எடுத்து கதவு எண் மூன்றி லும் விபத்து நடப்பதற்கு முன்னால் மேம்பாலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும், என்றார்.