போராடும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க கூட்டுக்குழு ஆதரவு
நாகர்கோவில் அக்.9- பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 25 மாத கால ஓய்வூதிய பலன்களை உட னடியாக வழங்க வேண்டும். பணியில் உயிரிழந்த தொழி லாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் .20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முழு வதும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் போக்கு வரத்து பணிமனைகள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 53 ஆவது நாளாக அக் டோபர் 9 அன்று கன்னியா குமரி மாவட்ட தொழிற் சங்கக் கூட்டுக் குழு சார்பில் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராணித்தோட்டம் போக்கு வரத்து பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பென்னெட் ஜோஸ் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.போராட் டக்குழு ஒருங்கிணைப்பா ளர் சோபன ராஜ் மற்றம் பலர் பங்கேற்றனர். 53 ஆவது நாள் காத்தி ருப்பு போராட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (விரைவு) மார்த் தாண்டம் கிளை பொரு ளாளர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பொன்.சோபனராஜ் பேசினார்.
