தேன்கனிக்கோட்டையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி, கெலமங்கலம் ஒன்றிய குழுக்கள் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரதானமாக தெலுங்கு தாய்மொழியாக கொண்ட இப்பகுதியில் இதுவரை 30 சந்தாக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று மேலும் 7 ஆண்டு சந்தாக்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர், தளி ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா, விவசாய சங்க துணை தலைவர் சிக்கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.