சென்னை,அக்.15- தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையிலுள்ள புதுக் கல்லூரியில் சனிக்கிழமையன்று (அக்.15) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி பெண் குஷ்புவுக்கு ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது பேசிய அவர்,“கடந்த இரண்டு ஆண்டு கொரோனா காலம் என்பது புதிய வேலை வாய்ப்புக்கு சவாலான காலமாக அமைந்திருந்தது. அத்தகைய நெருக்கடியான காலக் கட்டத்தில் திமுக ஆட்சி அமைந்தது. இதையே காரணமாக வைத்து வேலை யின்மை பிரச்சனையை கண்டும் காணாமல் விட்டுவிடவில்லை. ஒரு லட்சம் பேருக்கு இந்த ஓராண்டு காலத் தில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம்” என்றார்.
இதுவரைக்கும் 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 25 க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 12 ஐடிஐ நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். கடந்த 15 மாதத்தில் பல்வேறு நகரங் களில் பெரிய அளவில் 65 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள் ளன. சிறிய அளவில் 817 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 15, 691 நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. 99,989 பேர் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். ஒரு லட்சம் என்பது முடிவல்ல, இதனை தொடக்கமாக வைத்துக் கொள்ளுங் கள். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதை இலக்காக வைத்துச் செயல் படுங்கள் என்றும் கூறினார். இந்த முகாமில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயாநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.