‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’
சென்னை: வள்ளலார் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலை யில், வள்ளலார் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என, பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்த நாளான இந்த தனிப்பெருங் கருணை நாளில், அவர் கூறிய மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களி லும் நிலைநிற்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் பாராட்டு
சென்னை: 24எச் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கார் பந்த யத்தில் அஜித்குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்த செய்தி அறிந்து பெருமை கொண்டதாக துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் அஜித்குமார் மற்றும் அவரது அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இத்தகைய பெருமைக்குரிய போட்டியில் எஸ்டிஏடி லோகோவை ஜெர்சி, வாகனத்தில் பொறித்து விளையாடியதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். ரேசிங் களத்தில் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துவதாகவும் அவர் தனது பாராட்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு
சென்னை: சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 6.8.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வு அக்.11 அன்று நடத்தப் படவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை, அக்.5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதள முகவரியான www.drbchn.in இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். கூடுதல் விவரங்களுக்கு archn.rcs@gmail.com மின்னஞ்சல் மற்றும் 044-24614289 தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூட்டுறவுச் சங்கங் களின் கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் தலைவர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நரித்தனமாக செயல்படுகிறார்: தினகரன்
திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் திருச்சியில் ஊடக வியலாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் துரோகி என்ற வார்த்தையை அரசியலில் நினைக்கவே கூடாது என்ற அளவுக்கு எடப்பாடி பழனி சாமிக்கு பதிலடி கொடுப்போம்” என்றார். “இன்றைய அதிமுக, ஜெயலலிதாவின் அதிமுக அல்ல. பொதுச் செயலாளர் பதவிக்கான ஜனநாயக அடிப்படையை தகர்த்துவிட்டார்’’ என்று விமர்சித்தார். கரூர் சம்பவம் குறித்த கேள்விக்கு, “விபத்தை அரசிய லாக்க வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணிக்கு இழுக்க நரித்தனமாகச் செயல்படுகிறார். தூத்துக் குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்காதவர், இப்போது எப்படி பேச முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். வரும் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என்றும் தெரிவித்தார்.
பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்கு!
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்தவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற இரு வர் மீது, பிஎன்எஸ் சட்டப் பிரிவு 218-ன் கீழ் விபத்தை ஏற்படுத் தல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தல் ஆகிய இரண்டு பிரிவு களில் கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியர் குறித்து அவதூறு
கரூர்: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த னர். இது தொடர்பாக முகநூலில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் குறித்து அவதூறாக சனிக்கிழமை பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அளித்த புகாரின்பேரில், தாந்தோணி மலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வால்வோ சொகுசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்குள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. ஒவ்வொரு பேருந்தும் ரூ.1.15 கோடியில் வாங்கப்படுகிறது. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
சென்னை, அக்.5 - கரூரில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவ காரத்தில் தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்திருக் கின்றனர். தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27 அன்று கரூரில் நடத்திய பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலா ளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் இருவரது முன் ஜாமீன் மனுவை யும் சென்னை உயர்நீதிமன்றம் நிராக ரித்ததை தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள னர். இந்த முன் ஜாமீன் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்கக் கோரி திங்கட் கிழமை தலைமை நீதிபதி அமர்வில் முறை யிடவும் திட்டமிட்டுள்ளனர்.
அண்ணாமலை திடீர் தில்லி பயணம்
சென்னை: கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட் டவர்களை, கரூருக்கு வந்த பாஜக எம்.பி.க்கள் விசாரணை குழுவுடன், அண்ணாமலை சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் திடீ ரென சனிக்கிழமை கோவையில் இருந்து விமா னத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், அமித் ஷா மற்றும் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.