tamilnadu

img

முட்டுக் கொடுக்கப்பட்டுள்ள மின்கம்பம்!

முட்டுக் கொடுக்கப்பட்டுள்ள மின்கம்பம்

கிருஷ்ணகிரி, அக். 24- சூளகிரி வட்டம், மலைப்பகுதியான காரு பெல்லா அருகே சுமார் 70 ஆண்டுகள் பழமையான கோணதிம்மனப் பள்ளி கிராமத்தில் சுமார் 50 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு சரியான சாலை வசதி இல்லை. வருடத்தில் பாதி நாட்கள் மின்சாரம் தடைபடுவதால் மக்கள் இருளில் உள்ளனர். கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து அடிக்கடி மழை பெய்யும் நிலையில், ஒரு மின்கம்பம் சாய்ந்து எப்போதும் விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் பெரும் விபத்து ஏற்படுமோ என்ற அச்ச த்தில் மின்கம்பத்திற்கு மரத்தால் முட்டுக் கொடுத்து  வைத்துள்ளனர். மேலும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக கை தொடும் உயரத்தில் தொங்கிக் கொண்டிருப்ப தால், இரும்பு பைப் மீது ஒரு கம்பைக் கட்டி மின்கம்பிகளை உயர்த்தி கட்டி வைத்துள்ளனர். இது குறித்து மின்சார வாரியம், கிராம நிர்வாக அலுவலர், மின் ஊழியர்கள் அனைவருக்கும் கிராம மக்களால் தகவல் கொடுக்கப்பட்டும் இது வரை யாரும் கண்டு கொள்ளவில்லை. மின்கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்படா மல் தவிர்க்க சூளகிரி வட்டாட்சியர் தலையிட்டு மின்வாரியம் உடனடியாக மின்கம்பத்தை நேராக நிமிர்த்தி வைக்க வேண்டும், கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கும் மின்கம்பிகளை உயரமாக இழுத்துக் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.