‘முதலமைச்சர் விரைவில் வீடு திரும்புவார்’
சென்னை: நடைபயிற்சியில் ஈடுபட்ட போது முதல மைச்சருக்கு திங்களன்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டு வரு கிறார். மருத்துவ பரிசோதனைக்காக செவ்வாயன்று முதல மைச்சர் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல்வேறு பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனைக்கு திரும்பினார். இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல மைச்சர் நலமுடன் உள்ளார். அவருக்கு சில பரிசோத னைகள் எடுக்கப்பட்டன. மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” என்றார். பிரதமர் நலம் விசாரிப்பு இந்நிலையில், பிரதமர் மோடி, முதலமைச்சரை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க. அழகிரி செவ்வாயன்று சென்னை அப்போலோ மருத்துவமனை சென்று முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார்.
தொடர் போராட்டம் அறிவிப்பு
சென்னை: கல்லூரிக் கல்வி இயக்குநராக மூத்த அரசு கல்லூரி ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கழகத்தின் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “புத்தொளி, புத்தாக்க பயிற்சி நிபந்தனை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாற்றுப்பணி அடிப்படையில் பணியாற்றும் அண்ணா மலை பல்கலைக்கழக மிகை ஆசிரியர்களை, அரசு கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது. முனைவர் பட்டம் பெறாத ஆசிரியர்களுக்கு அரசா ணைப்படி, இணைப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும். பணி இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். நான் முதல்வன் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.6 அன்று கல்லூரி வாயில்கள் முன்பு கருப்பு அட்டை அணிந்து முழக்கப் போராட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து ஆக.13 அன்று மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டமும், ஆக.28 அன்று கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பைசாகூட வழங்கவில்லை
சென்னை: சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.6,264 கோடி, பீகாருக்கு ரூ.4,217 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.3,090 கோடி, குஜராத்திற்கு ரூ.1,245 கோடி, ஆந்திராவுக்கு ரூ.1,240 கோடியை கல்வி நிதியாக வாரி வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்திற்கு ஒரு பைசாகூட வழங்கவில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது.
பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை
சென்னை: 2023 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், “அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலை களை தற்காலிகமாக மூட வேண்டும்” என்று உத்தரவு பிறப் பித்துள்ளது. இதற்கிடையில், விருதுநகர் மாவட்டத்தில் நடந்த தொழிலக பாதுகாப்புத் துறை பயிற்சியில் பங்கேற்காத 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய் யப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு விசாரணை
சென்னை: நாமக்கல் கிட்னி விற்பனை சம்பவம் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார இயக்குநர் தலை மையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், திருச்செங் கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்து வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலம் பதில் சொல்லுமாம்!
சென்னை: அதிமுக தேர்தல் கூட்டணியில் அமமுக இணை யுமா? என்ற கேள்விக்கு “காலம் பதில் சொல்லும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
திமுக மேல்முறையீடு
சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை ஓடிபி பெற தடை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திமுக தரப்பில் மனுவாக மேல்முறை யீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ஆதார் விவரங்கள் எதுவும் வாங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை புதன்கிழமை (ஜூலை 23) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
574 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள்
சென்னை: நடப்புக் கல்வியாண்டில் அரசு கலை, அறி வியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள னர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி.செழியன், 574 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு விண்ணப்ப பதிவு இணையதளத்தை தொடங்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
சென்னை: பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் சிவகுமார், சதா சிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு வுக்கு ராமதாஸ் பதிவுத் தபால் மூலம் தனித்தனியே 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பியுள்ளார். ஏற்கனவே 4 பேரும் சஸ்பெண்ட் செய் யப்பட்டிருந்த நிலையில், கட்சியில் இருந்து ஏன் 4 பேரையும் நிரந்தரமாக நீக்கக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பி யுள்ளார்.
சீமானுக்கு புதிய பாஸ்போர்ட்
சென்னை: நிலுவை யில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி புதிய பாஸ் போர்ட் வழங்க மறுப்ப தாக சீமான் தொடர்ந்த வழக்கில், 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதி காரிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்க டேஷ் உத்தரவு பிறப்பித் துள்ளார்.
நிராகரிப்பு
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தவெக மற்றும் நாத கட்சிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை விஜய் மற்றும் சீமான் இருவரும் நிராகரித் துள்ளனர்.