ஆந்திரா, டிச.15- மேற்கு கோதாவரியில் ஆற்றுப் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அஸ்வராயபேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகூடத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஜல்லேறு என்ற ஆற்றுப்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலை யில், மேலும் பலி எண்ணிக்கை உயர்வதற் கான வாய்ப்புகள் இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்துள் ளனர். தொடர்ந்து மீட்பு பணிகளானது நடை பெற்று வருகிறது. பேருந்தில் 30க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மீட்பு பணியில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.