tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு வாரியமே கூலி வழங்க வேண்டும்

ஒப்பந்த ஊழியர்களுக்கு வாரியமே கூலி வழங்க வேண்டும்

மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் மறியல்

விழுப்புரம், செப். 23- ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்சார வாரியமே நேரடியாக கூலி வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (செப்.23) தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் 13 ஆண்டுகளாக பணி யாற்றி வருகின்றனர். ஆனால், ஒப்பந்த  ஊழியர்களே இல்லை என்று அரசுக்கு அவ்வப்போது வாரியம் அறிக்கை அளித்து வருகிறது. ஒப்பந்த ஊழியர்களை அடையா ளம் கண்டு, வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். திமுக  தேர்தல் வாக்குறுதி 153-இன்படி 10  ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த  ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வாரியத்தில் உள்ள  60 ஆயிரம் காலிப் பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். தடை செய்யப் பட்ட 19 இடங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையா ளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 50-க்கும்  மேற்பட்ட மேற்பார்வை பொறியா ளர் அலுவலகங்கள் முன்பு நடை பெற்ற மறியலில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற மறியலில் மத்திய அமைப்பின் பொதுச் செய லாளர் தி.ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய அவர், “ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல் அரசு ஏமாற்றி வருகிறது. நூற்றுக் கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலா ளர்கள் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 200-க்கும்  மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். ஒப்பந்த ஊழியர் களுக்கு எந்த விதமான பணி பாது காப்பும் இல்லை. ஒப்பந்த ஊழி யர்களை அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்யாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு  மாநிலச் செயலாளர் கே.அம்பி காபதி, மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் ஆர்.சேகர், செயலாளர் ஆர். அருள், பொருளாளர் ஜி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.