tamilnadu

பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையை செலவிட மறுக்கும் பாஜக அரசு

புதுதில்லி, டிச.8- வரி வருவாய் தொடர்ந்து அதி கரிக்கும் நிலையிலும் மோடி தலை மையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு முக்கிய துறைகளுக்கான செலவு களை கடுமையாக குறைத்துள்ளது. 2021-22 நிதியாண்டின் 50% காலம், அதாவது 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பட்ஜெட் ஒதுக்கீட்டில் 47% மட்டுமே இதுவரை செலவு செய்யப் பட்டுள்ளது. கடந்த 5 நிதியாண்டு களில் குறைந்த தொகை செலவிடப் பட்டிருப்பது இந்த ஆண்டில் தான். கொரோனா தொற்றுக்கு முன்னர் 6 மாத காலத்தில் குறைந்தது 53% செலவிடப்பட்டு வந்துள்ளது. ஒரு பொருளாதார நெருக்கடி உரு வாகும் சூழலில், மக்கள் கைகளில் பணப் புழக்கத்தை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்தை மேம் படுத்த முடியும் என்பது அடிப்படை பொருளாதார புரிதல். ஆனால், தாரா ளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவற்றை தீவிரமாக பின்பற்றும் பாஜக அரசு சர்வதேச பொருளாதார ஏஜென்சிகளின் வழிகாட்டுதலின் படி செலவுகளைக் குறைப்பதில் மட்டும் முனைப்பு காட்டிவருகிறது

3% குறைவு என்பது நமக்கு சாதார ணமானதாகத் தோன்ற வாய்ப்புள் ளது. ஆனால் மொத்த பட்ஜெட் ஒதுக் கீட்டு தொகையான ரூ.34.8 லட்சம் கோடியில் இது சுமார் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமான தொகை. இந்த தொகையை முறையாக செலவு செய்து, பட்டினியால் வாடும் மக்க ளுக்கும் தேவையான உணவு தானி யங்களை வழங்கியிருக்க முடியும்; அல்லது 100 நாள் வேலைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, அதிக நாட்கள் அதிக நபர்களுக்கு வேலை வழங்கி யிருக்க முடியும். மேலும் பொதுத் துறை நிறுவங்கள் மூலம் அனைவருக் கும் கால இடைவெளியை குறைத்து இலவசமாக கொரோனா தடுப்பூசி யை வழங்கியிருக்கவும் முடியும்.

செலவுகள் எந்த துறைகளில் வெட்டப்படுகின்றன?

தலைமை கணக்கு தணிக்கை அமைப்பின் நடப்பு நிதியாண்டிற் கான வரவு-செலவு அறிக்கை மூலம், மக்கள் நலன் சார்ந்த துறைகளில் செலவுகள் வெகுவாக குறைக்கப் பட்டுள்ளதை காண முடிகிறது.  பள்ளி கல்வித்துறையில் 29%, குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார துறையில் 22%, பட்டியலின மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனை கவ னிக்கும் சமூக நலன்மற்றும் அதிகார மளித்தல் துறையில் வெறும் 8%, பழங்குடியினர் நலத்துறையில் 28%, சிறுபான் மையினர் நலத்துறை யில் 17%, வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டு துறையில் 46%, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் 47% மட்டுமே இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டத்தை அமலாக்கும் ஊரக வளர்ச்சித்துறை இதுவரை பட்ஜெட் ஒதுக்கீட்டில் 61% செலவு செய்துள்ளது. ஆனால் நூறு நாள் வேலை திட்டத்திற்கான மொத்த தொகையும் செலவு செய் யப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஒதுக்கீட்டில் பெரும்பகுதி பழைய  ஊதிய நிலுவை தொகையை வழங்க செலவு செய்யப்படுவதும், அதிக நபர்களுக்கு வேலை வழங்க தேவை உருவாகி வருவதும் கவனிக்கத்தக் கது. இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை குறைக்க பா.ஜ.க அரசு தொடர்ந்து முயன்று வருவதை இடதுசாரிகளின் போராட்டங்களும், நிர்ப்பந்தங்களும் மட்டுமே தடுத்து நிறுத்தி வருகிறது.  இது போன்ற முக்கிய துறைகள் மட்டுல்லாது பிற துறைகளில் கூட செலவுகள் குறைந்து வருவது மிக வும் கவலைக்குரியது. உதாரணமாக திறன் மேம்பாட்டுத் துறையின் ஒதுக் கீட்டில் 24% மட்டுமே செலவு செய் யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, ஜி.எஸ்.டி மற்றும் பிற பொருளாதார கொள்கைகள் காரணமாக பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும்  சிறு, குறு நிறுவனங்களுக்கான துறை யிலும் கூட 45% பட்ஜெட் ஒதுக்கீடு மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விவசாயம், விவசாயி கள் நலன் மற்றும் கால்நடை, கால் நடை வளர்ப்பு துறைகளில் முறையே 45% மற்றும் 42% தொகை மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்காகவும் போராடி வரும் சூழலிலும், விவசாயிகளுக்கு ஆதரவானவர்களாக விளம்பரம் செய்து வரும் மோடி அரசால் பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கூட நெருக்கடி காலத் தில் முறையாக செலவு செய்ய இயல வில்லை.  சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கால நிலை மாற்றம் குறித்த அவசர முக்கி யத்துவம் வாய்ந்த விஷயங்களில் கொள்கைத் தெளிவும், தொலை நோக்குப் பார்வையும் இல்லாத பாஜக அரசால் முறையாக எந்த முன்னேற் றத்தையும் அடைய இயலவில்லை.  சுற்றுச்சூழல் அமைச்சகம் 25% தொகை யும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை யில் 30% மட்டுமே இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து அதிக வாக்குறுதி களை அள்ளி வீசி வரும் மோடி அர சால், எந்த வாக்குறுதிகளையும் நிறை வேற்ற இயலவில்லை என்பதே நிதர் சனம். மக்களை வதைக்கும் விதமாக அதிக வரி விதிப்புகளும், பல்வேறு முக்கிய துறைகளில் செலவுகளை சுருக்கி கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு சலுகைகள் வழங்குவதும் மட்டுமே அரசின் முக்கிய பணியாக மாறிவிட்டது தான் பெருந்துயர். ஏற்க னவே மந்த நிலைக்கு தள்ளப்பட்ட பொருளாதாரம், பாஜக அரசின் திட்ட மிடப்படாத ஊரடங்கினால் மேலும் சீரழிந்துள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் களை மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களை  அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இவை அனைத் தும் திட்டங்களாக மட்டுமே இருக் குமே அன்றி, நடைமுறைக்கு வரு வது அபூர்வம். வரிகளை அதிகரித்து மக்களை சுரண்டும் ஆர்வத்தில் சிறி தளவு அக்கறை கூட மக்கள் நலனில் இல்லை என்பதே கடந்த 7 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் நாம் கண்டு, அனு பவித்து வரும் உண்மை.

- நீலாம்பரன்

;