tamilnadu

காவல்துறை அறிவுரை எதையும் தவெக நிர்வாகிகள் கேட்கவில்லை

காவல்துறை அறிவுரை எதையும் தவெக நிர்வாகிகள் கேட்கவில்லை

கரூர் நீதிமன்றத்தில் காவல்துறை முக்கியத் தகவல்

கரூர், செப். 30 - வேலுச்சாமிபுரம் பிரச்சாரத்தின் போது, கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப் பதைப் பார்த்த பிறகும், விஜய்யின் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன், என்று  த.வெ.க. வழக்கறிஞரிடம் கரூர் நீதி மன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பி யுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் வேலுச்சாமிபுரம் பரப்புரையின் போது ஏற்பட்ட கோர மான நெரிசலில் 41 பேர் உயிரிழந்த  துயரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கான பாது காப்பில் அலட்சியமாக செயல் பட்டதாகவும், காவல்துறையின் விதி களை மீறியதாகவும் த.வெ.க. மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழ கன் மற்றும் மத்திய மாநகரச் செயலா ளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் காவல்து றையால் கைது செய்யப்பட்டிருந்த னர். அவர்கள் கரூர் குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதையடுத்து, நீதிமன்றத்தில் நடந்த வாதத்தின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில்,  தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ள தாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், காவல் துறை அனைத்து நடைமுறை களையும் பின்பற்றியே, சம்பந்தப் பட்டவர்களைக் கைது செய்துள்ள தாகவும் கூறினார்.  இதற்கு பதிலளித்த தவெக தரப்பு  வழக்கறிஞர், ஒருநபர் ஆணைய அறிக்கை வரும் வரை கைது நடவ டிக்கை கூடாது என்றும், விஜய் பரப்பு ரைக்கு வந்த கூட்டம் தானாக வந்த கூட்டம் என்றும், விஜய் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் மட்டுமே வரு வார்கள் என்று காவலர்களிடம் தெரி வித்ததாகவும் வாதிட்டார். உங்கள் கட்சி தலைவர் ஒரு டாப் ஸ்டார். அப்படி இருக்கையில், 10,000 பேர் வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாளில் எப்படி  குறைந்த எண்ணிக்கையில் வருவார் கள் என்று கணித்தீர்கள்? விஜய்யை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வரு வார்கள். அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டுமா, இல்லையா என்று நீதிபதி பரத்குமார் கேள்வி எழுப்பினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை பார்க்க வருவது அவரது கட்சியின ரின் கூட்டம், விஜய்யை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதி, தவெக கேட்ட மூன்று இடமும் போதுமானது அல்ல என்று தெரிவித்தார். அதிக  கூட்டம் வரும் என்று விஜய்க்குத் தெரி யுமா? அவரிடம் இது சொல்லப்பட்டதா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. காவல்துறை தரப்பு வாதாடும் போது, கரூரில் நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை என்றும்,  போலீஸ் கூறியதை மீறி தவறான பாதையில் சென்றதாகவும், முனி யப்பன் கோவில் சந்திப்பில் வேண்டு மென்றே தாமதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கூட்டம் அளவு  கடந்து சென்றதும் பேருந்தை முன் பாகவே நிறுத்தி பேசச் சொல்லி கூறி யதை ஆதவ் அர்ஜுனா மறுத்து விட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, கூட்டம் அளவு கடந்து சென்றது என்று  தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரச் சாரத்தை நிறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார். 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீதிமன்றத்தில் இருதரப்பு  வாதங்களும் நிறைவுபெற்றதை யடுத்து, மூன்று பேரையும் பதி னைந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.