கேசவன்பாளையத்தில் குடியிருக்க இடம் கேட்டு 7 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் வெற்றி
மயிலாடுதுறை, செப். 29- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகிலுள்ள கேசவன் பாளையம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு 7 நாட்களாக தலித் மக்கள் நடத்திய தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றியடைந்துள்ளது. குடியேறும் போராட்டம் நடத்திய புறம்போக்கு இடத்தை 2 மாதத்திற்குள்ளாக வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்குவதாக கோட்டாச்சியர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கை விடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அடங்கிய போராட்ட ஒருங்கி ணைப்புக்குழு அறிவித்துள்ளது. தரங்கம்பாடியை ஒட்டியுள்ள கேசவன்பாளையம் என்கிற கிரா மத்தில் 150-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மாணிக்கப்பங்கு சாலையில் வசித்து வந்தவர்களை சுனாமி பேரழிவுக்குப் பின், தற்போது வசித்து வரும் பகுதியில் குடியிருப்புகளை கட்டித் தந்து குடியமர்த்திய நிலையில், ஒரே வீட்டிற்குள்ளேயே இரண்டு, மூன்று குடும்பங்களாக இடநெருக்கடியோடு வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்க இடம் கேட்டு தமிழ்நாடு முதல்வர், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் என கோரிக்கை மனுக்கள் அளிக்காத அதிகாரிகளே இல்லை என்ற நிலையில், தங்களுக்கு எப்படியாவது இடம் கொடுப்பார்கள் என்று காத்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 95-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகளை அமைத்து குடியேறினர். வட்டாட்சியராக உள்ள சதீஷ் என்பவர், குடிசைகளை கட்டிக் கொள்ளுங்கள் என உத்திரவாதம் அளித்த பின்னரே, தலித் மக்கள் கடன் வாங்கி குடிசைகளை கட்டிய நிலை யில், செப்டம்பர் 23 அன்று காலை வட்டாட் சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து திசைத்திருப்பி விட்டு, வட்டாட்சியர் சதீஷ், காவல்துறையி னரின் பாதுகாப்போடு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவ லர்கள், கிராம உதவியாளர்கள் நூற்றுக் கும் மேற்பட்டோரை வைத்துக் கொண்டு குடிசைகளை பிய்த்தெறிந்து, குடிசைகளிலிருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை தூக்கி எறிந்து அராஜ கத்தில் ஈடுப்பட்டனர். மேலும் கீற்று, மரங்களை வாகனங்களில் ஏற்றி அனுப்பியுள்ளார். தகவலறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், சி.விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மதியழகன், சுந்தரமூர்த்தி(பேரூராட்சி கவுன்சிலர்), நெப்போலியன், கமல் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஐயப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் குணசேகரன், சந்திரமோகன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர், கிராம பொதுமக்கள், வட்டாட்சியரின் அடாவடித்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். காவல்துறையின் தடுப்பையும் மீறி தாங்கள் குடிசைக் கட்டிய இடத்தில் நுழைந்து அங்கேயே தங்கி சமைத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்திய நிலையில், சீர்காழி கோட்டாட்சியர், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இடத்தை அளவீடு செய்து பிரித்து தருவதாக உறுதியளித்தனர். ஆனாலும் பிரித்து தரும் வரை தாங்கள் இங்கேயே போராட்டத்தை நடத்துவோம் என கூறி கேசவன்பா ளையம் மெயின்ரோட்டில் பந்தல் அமைத்து 7 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்எல்), இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம், உழைக்கும் விவ சாயிகள் இயக்கம், நிலம், நீர் பாது காப்பு இயக்கம் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து, ஒவ்வொரு நாளும் போரா டும் மக்களை சந்தித்து, போராட்டத் திற்கு வலு சேர்த்து வந்தனர். இந்நிலையில், 7 ஆவது நாளான திங்களன்று சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இரண்டு மாதங்களில் வகை மாற்றம் செய்து, குடிமனை பட்டா வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. போராட்டம் நடைபெற்ற இடத்தில், மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் நெப்போலியன், கமல், சுந்தரமூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர் யோ.ஸ்டாலின், செய்தித் தொடர்பாளர் தேவா, உழைக்கும் விவசாயிகள் இயக்கத் தின் நெல்சன், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கவியரசன், நிர்வாகிகள் ரஷ்யா, பவுல் சத்தியராஜ், கபிலன் உள்ளிட்டோர் உரையாற்றி, அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை குறித்தும், போராட் டம் வெற்றி குறித்தும் உரையாற்றினர்.
