tamilnadu

img

கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், செப். 9-  காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில், ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச் சுமை பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மாற்று திட்டம் உருவாக்கப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் 22 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம், மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன், தரைக்கடை தள்ளுவண்டி சங்கச் செயலாளர் எம். தண்டபாணி, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப. சரவணன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் அரவிந்த், தமிழ்நாடு அரசு ஊழியர் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கெ. சக்திவேல், போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சதீஷ், எல்எல்எப் டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உரையாற்றினர்.  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் சங்க மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.