tamilnadu

img

மனிதப் பரவல் பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பாத்திரம் வகிக்கிறது

மனிதப் பரவல் பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பாத்திரம் வகிக்கிறது

 முனைவர்  ராம.பிச்சப்பன் பேச்சு

மதுரை, அக். 11- கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - மதுரை இணைந்து  வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் “விரு மாண்டி - ஆப்பிரிக்காவில் இருந்து முதன் முதலில் வெளியேறிய மனித குலத்தின் சந்ததி” எனும் தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உயிரி அறிவியல் துறை  பேராசிரியர், முனை வர் ராம.பிச்சப்பன்  பேசினார். அவர் மேலும் பேசுகையில்,”தற்போதைய தமிழ்நாட்டின் அத்திரப்பாக்கத்தில் மனித இனத்திற்கு முந்தைய ஹோ மோ எரெக்டஸ் என்ற துவக்க நிலை  ஆதாரங்களும் உள்ளன. ஆப்பிரிக்கா வில் தோன்றிய மனித இன மரபணு வில் ஒய் (Y) குரோமோசோமின் கலப்பு ஏற்படாத பகுதியில் ஏபி (A B) எனும் 2 மார்க்கர்களின் மாற்றங்கள் ஏற்பட்டது. பின்னர் மூன்றாவது மாற்றமாக சி (C) என்ற மாற்றம் ஏற்பட்ட முதல் அலை யாக இன்றைய தெற்கு இந்தியாவை அடைந்தனர். அதற்குப் பிறகு இங்கி ருந்து தான் உலகம் முழுவதும் இன்று வியாபித்திருக்கும் மனிதப் பரவல் பார்க்கலாம். ஆப்பிரிக்க இனக் குழுவின் மொழி வேறு பல உள்ளது. பின்னர் மனிதப் பர வல் நாகரிக காலத்தில் புரோட்டோ திரா விட (proto Dravidian ) மொழியாக சுமார் 13,000 வருடத்திற்கு முன் பேசப்பட்டு, சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் எழுத்து வடிவம் பெற்றிருக்கலாம். தற்போதைய கீழடியின் கொந்தகை முதுமக்கள் தாழியில் எடுக்கப்பட்ட எலும்புகளின் மரபணு சிதைந்து உள்ளது. அதேபோல பல், காதின் உள் எலும்புகளின் பகுதிகளில் இருந்து ஆதா ரங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது” என அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னதாக பாண்டிச் செல்வி அறிவியல் இயக்கத்தை அறிமுகப் படுத்திப் பேசினார். முனைவர் கிருஷ்ண சாமி, சிறப்புப் பேச்சாளர் முனைவர் பிச் சப்பனை அறிமுகப்படுத்திப் பேசினார்