ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
சென்னை, அக். 4 - கும்பகோணம் மாவட்டத் தில் கலைஞர் பெயரில் பல் கலைக்கழகம் அமைக்கப் படும் என்று சட்டப்பேரவை யில் கடந்த ஏப்ரல் மாதம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்த மசோதா சட்டப்பேரவையிலும் நிறை வேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் கும்ப கோணம் கலைஞர் பல்கலைக் கழக மசோதாவை குடியர சுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்துள் ளது. மசோதாவை குடி யரசுத் தலைவருக்கு ஆளு நர் அனுப்பியது சட்டப்பேர வையின் முடிவுக்கு எதிரா னது என அரசு தெரிவித்துள் ளது.
