சென்னை, செப்.4- உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் என நீதிபதிகளிடம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கி ணைந்த பல அடுக்கு நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்கள் ரூ.315 கோடி செலவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) நடை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பேசுகையில், வரும் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மிகச்சிறப்பாக பணி யாற்றியுள்ள முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு வாழ்த்துகள். 160 ஆண்டுகள் பழமை என்பது சென்னை, கல்கத்தா, மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கே சொந்தம் என்றார். மேலும், சென்னை உயர்நீதி மன்றக் கட்டடம் மிகக் கம்பீரமாக நிற்கிறது என்றும் தெரிவித்தார்.
பாரம்பரிய கட்டிடம்
இந்த கட்டிடம் முதல் உலகப் போரின் போது எம்டன் போர் கப்ப லால் தாக்குதலுக்கு உள்ளானது. அதன் நினைவாக பாரிமுனையில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. உலக நீதிமன்றத்துக்கே சென்னை உயர்நீதிமன்றம் அடையாளமாக உள்ளது. இதே கம்பீரத்துடனும், அழ குடனும் புதிய கட்டடம் அமைய வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சரைக் கேட்டுக்கொள் கிறேன். மெட்ராஸ் சட்டக் கல்லூ ரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டியவர் கருணா நிதி எனக் குறிப்பிட்டார். பாரம்பரிய கட்டடங்கள் நம் வரலாறு. அதை பாதுகாப்பதில் அரசு கவனமாக உள்ளது என்றார். சென்னை பழைய சட்டக் கல்லூரி வளாகமும், பழமை மாறாமல் மேம்ப டுத்தப்படும். புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற நீதித்துறையின் பரிந்துரைக்கு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கியது. நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
விரைந்து நீதி வழங்க நடவடிக்கை
பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசா ரிக்கவும் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.268 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 155 பணியாளர் பணியி டங்கள் உருவாக்கித் தரப்பட் டுள்ளன. நீதித்துறையின் நிலை யான செயலாக்கத்துக்கு அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும். பொது மக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகை யில், நீதித்துறை உள்கட்ட மைப்புகளை உருவாக்கித்தருவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் உள்ள தாக நீதியரசர் ரமணா வெளிப்படை யாக பாராட்டினார் என்பதை சுட்டிக் காட்டினார். பின்னர் தமிழ்நாட்டின் சார்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத்துக்கான கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும். நீதி பதிகள் நியமனத்தில் சமூகநீதி பின் பற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நீதியின் தரத்தை உயர்த்துவோம்
உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசுகையில், சென்னை எப்போதும் எனக்கு 2ஆவது வீடு. புதிய கட்டடம் கட்டப்படுவதும், பழையது புதுப்பிக்கப்படுவதும் பெருமைமிக்க தருணம். நீதியின் தரத்தை, நீதித்துறையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்வோம். எதற்காக தோற்று விக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிறை வேற்றும் என்று நம்புகிறேன் என்றார்?.
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை?
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசுகையில், காஷ்மீர் எனது பிறந்த பூமி, தமிழ்நாடு வாழ்ந்த பூமி என்றார். உயர்ந்த வரலாற்றை கொண்டது சென்னை உயர்நீதிமன்றம் என்றும் தெரிவித்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசுகையில், உச்சநீதி மன்றத்தின் கிளை விரைவில் சென்னையில் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் ராமசுப்ரமணியன், சுந்தரேஷ், அமைச்சர்கள் எ.வ.வேலு, ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.