tamilnadu

img

இந்தியா மீதான இறக்குமதி வரி உயர்வைக் கண்டித்து மாணவர்-வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்தியா மீதான இறக்குமதி வரி உயர்வைக்  கண்டித்து மாணவர்-வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக. 17-  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மீதான இறக்குமதி வரியை 50 சதவீதம் உயர்த்தியதைக் கண்டித்தும், மெளனம் காக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் அர்ஜுன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஹரிஷ் துவக்கவுரையாற்றினார். வாலிபர் சங்க மாநகரத் தலைவர் நாகராஜ், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வசந்த், செயற்குழு உறுப்பினர் தர்ஷினி ஆகியோர் கண்டன உரையாற்றினார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.அருளரசன் நிறைவுரையாற்றினார். வாலிபர் சங்க மாநகரக்குழு உறுப்பினர் தினேஷ் நன்றி கூறினார்.