நாச்சியார்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
கும்பகோணம் ஆக.10 - தமிழக அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட நாச்சியார்கோயிலில் நடைபெற்ற முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தொடக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களின் குறைகளை கேட்டு, தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார். இதில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உட்பட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.