tamilnadu

img

அய்யம்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

அய்யம்பேட்டையில்  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பாபநாசம், ஜூலை 17-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, அய்யம்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்.  இதில், கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் அய்யாராசு, அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி, திமுக அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் துளசி அய்யா, அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், பாபநாசம் தாசில்தார் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெற்று, உரிய நடவடிக்கைக்கு, தொடர்புடைய துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.