tamilnadu

img

வாய்ப்பு வாசல்

     எஸ்எஸ்சி 3,131 காலியிடங்கள் 

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 3 ஆயிரத்து 131 பணியிடங்களை நிரப்பு வதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (சிஹச்எஸ்எல்) அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. எஸ்எஸ்சிஆல் நடத்தப்படும் (Com bined Higher Secondary Level  Exam) இந்த போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். இதற்கு தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு  ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த் தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்று இருக்க வேண்டும் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்கவேண்டும். வயது வரம்பு : 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்ச்சிஉள்ளது.  தேர்வு முறை : தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். முதற்கட்ட தேர்வு தேதி 8.9.2025 முதல் 18.9.2025 வரை நடைபெறும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு பிப்ரவரி மாதம் 2026இல் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங் களில் முதற்கட்டத் தேர்வு நடைபெறும்.  விண்ணப்பிக்க மற்றும் எழுத்துத் தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டம், உடற்தகுதி, மருத்துவத் தகுதிகள், தட்டச்சுத் திறன்தேர்வு போன்ற கூடுதல் விபரங்களைப் பெறு வதற்கு தேர்வாணையத்தின் இணைய தளமான www.sss.gov.in இல் பார்வையிடலாம். விண்ணப்பிப்ப தற்கான கடைசித் தேதி ஜூலை 18, 2025 ஆகும்.

எஸ்பிஐ வங்கியில் 541 பணியிடங்கள்

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பிஒ (Probationary Officer) பணிக்கான 541 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளார்கள். இதற்கான அறி விக்கை வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி  : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திடமிருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி  ஆண்டுத்தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க லாம். வயது வரம்பு :  குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சமாக 30 வயதும்  இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப் பட்ட, பட்டியலின, பழங்குடி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணு வத்தினருக்கு அரசு விதிமுறைகளின் படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி  வழங்கப்படும். தேர்வு முறை : ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இது  இரண்டு கட்டமாக இருக்கும். முதல் நிலைத் தேர்வு ஆகஸ்டு 2025இல் நடை பெறும். இதற்கான முடிவுகள் வெளி யான பின்னர், செப்டம்பர் 2025இல் முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இதன் பின்னர் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடக்கும். அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டு, முடிவுகள் நவம்பர் 2025இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்துத் தேர்வுகளில் ஒவ்வொரு தவறான விடைக்கும் 1/4 மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, மதிப்பெண்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு https://sbi.co.in/web/careers/Current-openings என்ற இணைப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : ஜூலை 14, 2025 ஆகும்.

ராணுவ  விஞ்ஞானி ஆகலாம்!

பொறியியல் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்களுக்கு ஒன்றிய அரசின் ராணுவ ஆய்வு மேம்பாட்டுக்கழகத்தில் (Defence Research Development Organisation) பணியாற்றும் வாய்ப்பு வந்துள்ளது. விஞ்ஞானி மற்றும் பொறியாளர் (பி கிரேடு) பணிகளில் 155 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித் தகுதியோடு கேட் (GATE) தேர்வு எழுதி வெற்றி பெற்றிருத்தல் அவசியமாகும். வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்கவேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு  www.rac.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.  விண்ணப்பிப்பதற்குக் கடைசித் தேதி ஜூலை 4, 2025 ஆகும்.