tamilnadu

img

எஸ்பிபி காகித ஆலைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எஸ்பிபி காகித ஆலைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப். 6- எஸ்.பி.பி காகித ஆலைத் தொழி லாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் எஸ்.பி.பி காகித ஆலை இயங்கி வருகிறது. இதில்,  சுமார் இரண்டாயிரம் தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த 18 மாதங்க ளாக ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப் படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், ஊழியர்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் மனிதவள மேம்பாட்டுத் துறை யைக் கண்டித்தும், கருணை அடிப் படையிலான வாரிசு வேலைகளை உடனடியாக வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச தொழிற்சங்கத் தலை வர் வெங்கடேஷ் தலைமையில் நடை பெற்ற இந்த பேரணியில், ஒன்பது தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர் வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என திர ளானோர் பங்கேற்றனர்.  முன்னதாக, காகித ஆலை வளா கத்தில் தொடங்கிய இந்த பேரணி, முக்கிய சாலைகள் வழியாகச் சென்று, இறுதியாக எஸ்.பி.பி காலனி பேருந்து நிறுத்தத்தில் நிறை வடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், “18 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்,” “தொழி லாளர் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்” என முழக்கங்களை எழுப்பினர். 1960 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த காகித ஆலை, ஆண்டுக்கு  20,000 டன் உற்பத்தியுடன் தொடங்கி,  கடந்த ஆண்டு 1,65,000 டன் உற் பத்தியை எட்டியுள்ளது. தமிழகத் தின் காகிதத் தேவையில் கணிசமான  பங்களிப்பை வழங்கி வரும் இந்த  ஆலையின் தொழிலாளர்கள், தங்க ளது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்தியதாக தெரிவித்த னர்.