அனைத்து வகை கடன்களும் விரைவாக கிடைக்க விதிகளை எளிமைப்படுத்துக! கூட்டுறவு ஊழியர் சங்க சிஐடியு மாநில மாநாடு வலியுறுத்தல்
திண்டுக்கல், ஜூலை 26 - அனைத்து வகை கடன்களும் விரைந்து கிடைக்க விதிகளை எளிமைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) மாநில மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. சனிக்கிழமை சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க கட்டடத்தில் உள்ள வி.பி.சிந்தன் நினைவரங்கத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு டி.சௌந்தர், பி.பெரிய சாமி, எம்.ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.முனியாண்டி, டி.பன்னீர் செல்வம், எஸ்.செல்வம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.பி.ஜெயசீலன் வரவேற்றார். ராபின்சன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலத் தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி துவக்கவுரை யாற்றினார். கன்வீனர் மு.சாதிக்அலி அறிக் கையை முன்மொழிந்து பேசினார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.ஆர்.கணேசன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பேரா.சோ.மோகனா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் பேசினார். மாநிலத் தலைவராக எம்.முனியாண்டி, செயலாளராக மு.சாதிக்அலி, பொருளாள ராக டி.பன்னீர்செல்வம், துணைத் தலைவர் களாக ஏ.ராபின்சன், எஸ்.செல்வம், சி.முத்துச் சாமி, டி.சுரேஷ், சதீஷ், மாநிலத் துணைச் செய லாளர்களாக எம்.வேல்முருகன், என்.ராஜேஷ், பி.கலைவாணன், பி.ரமேஷ், எஸ். பழனியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். திண்டுக்கல் மாவட்டத் தலைவர் அ. சென்னித்துரை நன்றி கூறினார். விவசாயக் கடன் வழங்குவதில் வேளாண் தொடக்கக் கூட்டுறவு சங்கத்திற்கு முன்னு ரிமை வழங்க வேண்டும். குழுக் காப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஒன்றிய - மாநில அரசுகளின் அதீத கட்டுப்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.