சேதுபாவாசத்திரம்: தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதையொட்டி, பூவாணம் கிராமத்தில், கிளைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தீக்கதிர் ஆண்டுச் சந்தா ரூ. 2,200 மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரனிடம் வழங்கப்பட்டது. இதில், தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, கிளை நிர்வாகிகள் எழில் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல், ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.