மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரகதீஸ்வரன் - ஐஸ்வர்யா தம்பதியினர், தீக்கதிர் ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.2,300-ஐ மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கரிடம் வழங்கினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரை.நாராயணன், டி.சலோமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.