பதவியை இழந்தார் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர்
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்க ரன்கோவில் நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி செயல்பட்டு வந்தார். துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண் ணன் (எ) ராஜு உள்ளார். கடந்த மாதம் நகர் மன்றத் தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக, அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நம் பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 24 நகர் மன்ற உறுப்பினர்கள் நக ராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. அந்த வகையில் ஜுலை 2 (புதன்கிழமை) நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக் கெடுப்பு நடைபெற்றது. இதில் 29 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தி னர். இதில் 28 ஆதரவு வாக்குகளுடன் நம்பிக்கை யில்லா தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி பதவியை இழந்தார். அடுத்த நகர்மன்றத் தலை வர் யார்? என்பது பின்னர் அறிவிக்கப்படும் என நக ராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.