தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தக் கப்பல் கட்டும் தொழில் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் ரூ.15 ஆயிரம் கோடியில் வணிக ரீதியிலான கப்பல் கட்டும் தளத்தை தூத்துக்குடியில் அமைக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.