கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 போனஸ் வழங்க வலியுறுத்தி, திருப்பூர் மேட்டுப்பாளை யம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சம்மேளன பொதுச்செயலாளர் டி.குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் எம்.கணேசன், பொருளாளர் ரமேஷ், துணைத்தலைவர் எ.ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
