குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
சென்னை, செப். 27- சென்னை மாவட்ட சாலையோர சிறு கடை விற்பனையாளர்கள் சங்கத்தின் எம்.கே.பி. நகர் வெஸ்ட் அவென்யூ சங்கத்தின் 3ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் தலைவர் ஏ.நைனா முகமது தலை மையில் நடைபெற்றது. எம்.முனியாண்டி சங்கக் கொடியை ஏற்றினார். எச்.ரஷீத் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் எஸ்.கோபால கிருஷ்ணன் வேலை அறிக்கை யையும், ஜி.மோனிஷா வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தனர். துணைத் தலைவர் எஸ்.அறிவழகன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேரவையை நிறைவு செய்து பேசினார். பி.காசிம் நன்றி கூறினார். தீர்மானங்கள் சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் போது, மாற்று இடம் வழங்க வேண்டும், அனை வருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், கடைகளை மாநகராட்சி அதி காரிகள் முறைப்படுத்தி தர வேண்டும், வியாபாரம் செய்யும் அனைவருக்கும் மாநகராட்சி தள்ளு வண்டிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, புதிய நிர்வாகிகள் தலைவராக எ.நைனா முகமது, செய லாளராக எஸ்.கோபாலகிருஷ்ணன், பொருளாளராக ஜி.மோனிஷா உள்ளிட்டு 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
