tamilnadu

img

அறந்தாங்கி அரசு கல்லூரியில் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி அரசு கல்லூரியில் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி, செப் 2-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மாணவர்களுக்கான சாலைப் போக்குவரத்து  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை வகித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி னார். கல்லூரிக் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம், நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி அனைத்துத் துறை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.  தமிழ்த் துறைப் பேராசிரியை இரா.ராஜலட்சுமி, ஆங்கிலத் துறைப் பேராசிரியை முனைவர் ரா.அபிராமி, கணினி அறிவியல் துறைப் பேராசிரியர்கள் பி.கார்த்தி கேயன், ஏ.வனிதா மற்றும் அலுவலகப் பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர் பங்கேற்ற னர்.